அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், நாட்டை கட்டியெழுப்பும் திறமை ஜனாதிபதிக்கு உண்டு. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆற்றல் ஜனாதிபதி ரணிலிடம் உண்டு. எனினும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க தவறியுள்ளனர். எனவே அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read Moreசுற்றுலா சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
பதுளை – கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார். இது தொடர்பில் சாட்சியமளித்த தனுஷ்க மதுஷன் கூறியதாவது, நாங்கள் திருமணம் முடிக்கவில்லை. எனது காதலி மாத்தறை, குருநாகல் தாதியர் இல்லத்தில் கல்வி கற்று வருகின்றார்.நேற்று காலை குருநாகலிலிருந்து வந்து அப்புத்தளையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு சென்று மதியம் மூன்று மணியளவில் மலைப்பகுதிக்கு சென்றோம். பிரதான வீதியில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில்…
Read Moreவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் 2023-ம் ஆண்டு வீசிய முதல் புயல் மொக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு 14 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நுழையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மணிக்கு 150 – 175 கிமீ வேகத்தில் வீசும் எனவும், வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் கடல் அலைகள் 5 முதல் 6 அடி உயரம் வரை எழும்பக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சூறாவளியின் தாக்கம் காரணமாக தீவின் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து…
Read Moreமர்மமாக உயிரிழந்த களுத்துறை மாணவி! சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – பொலிஸாரின் சந்தேகம்
இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மே மாதம் 26அம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளின் போது குறித்த விடுதியின் உரிமையாளரது மனைவி நேற்று(11.05.2023) கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் விடுதி உரிமையாளரது மனைவியும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், ஆசிரியரிடமம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆசிரியருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More